ஐஸ்க்ரீமில் சரக்கு கலந்து விற்பனை! – கோயம்புத்தூர் கடைக்கு சீல்!
கோயம்புத்தூரில் ஐஸ் க்ரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்க்ரீம் என்றாலே அனைத்து வயதினருக்கும் அலாதி பிரியம். இதனாலேயே பல்வேறு வகையான ஐஸ்க்ரீம்களும் தயாரித்து விற்கப்படுகின்றன. ஆனால் கோயம்புத்தூர் கடை ஒன்றில் தயார் செய்த ஐஸ்க்ரீம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஐஸ்க்ரீம் கடை ஒன்றில் மதுவகைகளை கலந்து புதிதாக போதை ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சோதனை செய்த அவர்கள் மதுபாட்டில்களை கண்டுபிடித்ததோடு கடைக்கும் சீல் வைத்துள்ளனர்.