வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (13:31 IST)

கோகோ கோலா குளிர்பான ஆலைக்குத் தடை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் கோகோ கோலா குளிர்பான ஆலை தொடங்குவதற்கு அப்பகுதி மக்கள் கத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் எதிரொலியாக, தமிழக அரசு ஆலை தொடங்குவதற்குத் தடை விதித்துள்ளது.
 
பெருந்துறை சிப்காட்டில் கோகோ கோலா நிறுவனத்தின் குளிர்பான ஆலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 
அப்பகுதி விவசாயிகள் 71 ஏக்கர் நிலத்தில் கம்பெனி தொடங்கப்பட்டால், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் கெட்டுவிடும். மண்ணும், காற்றும் மாசுபடும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில், ஆலை அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 99 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான ஆலை அமைக்க தமிழக அரசு தடை விதித்து திங்கட் கிழமை உத்தரவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
முன்னர், தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியிலும் குளிர்பான ஆலைகள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு மக்கனிள் கடும் எதிர்ப்பால் பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.