1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (17:57 IST)

ஸ்டாலினிடம் பயம் தெரிகிறது.. GST வரி அல்ல… வழிப்பறி என கூறிய முதல்வருக்கு குஷ்பு பதிலடி..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  GST வரி அல்ல… வழிப்பறி என கூறி பதிவிட்டதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருந்ததாவது: 
 
“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.
 
பேச நா இரண்டுடையாய் போற்றி!
 
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
 
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!
 
அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?
 
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
 
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.
 
ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!
 
முதல்வரின் இந்த பதிவுக்கு குஷ்புவின் பதில் இதோ:
 
முதல்வர் ஸ்டாலினிடம் பயம் தெரிகிறது. சொத்து வரி கட்டணம் உயர்வு,  மின்சார கட்டணம் உயர்வா, ஆவின் பால்,  தயிர், நெய் விலைஉயர்வு, மற்றும் அடிப்படை பொருட்கள் ராக்கெட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இருந்தும் நீங்கள் அதைக் கண்டும் காணாமலும் இருக்கிறீர்கள். "ஸ்டாலின் அவர்களே ஏன் இந்த பயம்? கொஞ்சம் சுயபரிசோதனை செய்தால் அது உங்களுக்கு உதவும். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எங்களுக்குத் தெரிவிக்கவும்’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran