ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:04 IST)

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என தமிழக முதல்வர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
 
NEET என்பதில் ELIGIBLITY என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது  என்றும், நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதையும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
மேலும் விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva