1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:27 IST)

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்: பிரதமர் முன் முதல்வர் பேச்சு

MK Stalin
இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.
 
மேலும் இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம், மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 முன்னதாக திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றார் என்பதும் அதேபோல் பிரதமரை ஆளுநர் ஆர்.என்ரவி வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி  முதல்வர் ஸ்டாலின் ஆகிய மூவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran