1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:35 IST)

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது: வரி குறைப்பு குறித்து முதல்வர் பேச்சு

stalin
மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை வாட் வரியை குறைக்க வில்லை என பிரதமர் கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என பிரதமரின் பேச்சு குறித்து சட்டமன்றத்தில் இன்று தமிழக முதல்வர் கூறியுள்ளார் 
 
பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள என பிரதமர் குற்றம் சாட்டியது தவறு என்று ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அவர் பேசி இருக்கிறார் என்றும் முதல்வர் பேசியுள்ளார்
 
மேலும் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்காக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழியை காணவில்லை என குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது