மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உண்மையான ஜனநாயகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உண்மையான ஜனநாயகம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் மேலும் பேசியதாவது:
ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பாஜக, இந்திய ஜனநாயக அமைப்பை சிதைக்கிறது பாஜக. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் பிரதமர் ஆன பின்னர் அதை மறந்துவிட்டார்.
சி.ஏ.ஜி அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை கூண்டோடு மாற்றியது ஏன் ?, மாநிலங்களை காப்போம், இந்தியாவை காப்போம், இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உண்மையான ஜனநாயகம் என்று முதல்வர் பேசினார்.
இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. எனவே இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். மினி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள 5 மாநில வாக்காளப் பெருமக்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Edited by Siva