1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:07 IST)

30 ரூபாய் டாக்டர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருவாரூரைச் சேர்ந்த 30 ரூபாய் டாக்டர் இன்று காலமானார் என்றும் அதன் காரணமாக அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் முப்பது ரூபாய் டாக்டர் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்
 
திருவாரூரில் நான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் அசோக் குமார் என்பவர் ஏழை எளியவர்களின் பாதுகாவலராகவும் இருந்தார். கடந்த பல ஆண்டுகளாக எந்த சிகிச்சைக்கு நோயாளிகள் வந்தாலும் அவர்களிடம் 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று திடீரென 30 ரூபாய் டாக்டர் அசோக்குமார் மரணம் அடைந்ததை அடுத்து அமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேல் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த அசோக்குமார் ஏழை எளியவர்களின் பாதுகாவலர் என்றும் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளித்து மனிதநேயத்தின் மறு உருவமாக திகழ்ந்தார் என்றும் முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்