செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (10:58 IST)

பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார் நிர்மலா சீதாராமன்: முதல்வர் ஸ்டாலின்

nirmala sitharaman
பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார் நிர்மலா சீதாராமன் என திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார், திமுக அரசு கோயில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார், அண்ணாமலை போன்றோர் இந்த கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.

இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக மாடல் ஆட்சியில் தான் மீட்கப்பட்டு இருக்கிறது. சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி என பேசியுள்ளார்.

முன்னதாக தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடி வருகிறார்கள், கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத் தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

Edited by Mahendran