ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (14:25 IST)

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

MK Stalin
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி அளித்த போது இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர் என்றும் தெரிவித்தார். 
 
திமுக ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி ஆச்சாரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
இந்த வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva