செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தாயகம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: வெளிநாட்டு பயணம் வெற்றி என அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில் இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு தாயகம் திரும்பி உள்ளார்.
 
தாயகம் திரும்பிய உடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 6,100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திலுள்ள வேலை வேலை இல்லாத 14,700 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வெளிநாட்டினர் தன்னிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்
 
முன்னதாக சென்னை வந்தடைந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை அரசு உயரதிகாரிகள் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர்