1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (08:10 IST)

மாலத்தீவு இல்லை.. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பது இங்கேதான்..!

Stalin
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது அவர் ஓய்வு குடும்பத்துடன் ஓய்வு எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. 
 
முதல் கட்டமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவலை திமுக மறுத்துள்ளது. இதனை அடுத்து தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அவர் ஏப்ரல் 29ஆம் தேதி கொடைக்கானல் சென்று மே 4 ஆம் தேதி வரை அங்கு ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து கொடைக்கானலில் செல்லும் வழியில் உள்ள வத்தலகுண்டு உள்பட ஒரு சில பகுதிகளில் சாலைகளை செப்பனிடும் பணி நடந்து வருவதாகவும் கொடைக்கானலில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மே 4 வரை ஓய்வெடுக்கும் முதல்வர் சாலை அதன்பின் சென்னை திரும்பி தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும்   அதன் பின்னர் வட இந்தியாவில்  இந்தியா கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran