திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (16:09 IST)

ஊரடங்கில் மேலும் புதிய தளர்வுகள்: முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் சில தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்த ஆலோசனையில் நாளை முதல்வர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
 
குறிப்பாக ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்கலாம் என்றும் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை மாலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல்வரிடம் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது