வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (13:30 IST)

அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உண்ட மாணவி உயிரிழப்பு: முதலமைச்சர் ஆறுதல்

நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை கொண்ட மாணவி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு நிதி உதவி அறிவித்துள்ளார். 
 
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உருது நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆறாம் தேதி 4 மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை உட்கொண்டதாக தெரிகிறது.
 
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஜெய்பா பாத்திமா என்பவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். 
 
மேலும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran