குடியரசு தின விழா; முதன் முதலாக முதல்வர் கொடியேற்றிய விவகாரம் - பின்னணி என்ன?
சென்னை மெரினா கடற்கரையில் ஒட்டிய காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றி வைத்தார்.
வழக்கமாக, சுதந்திர தினத்தன்றுதான், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கொடியேற்றி வைப்பார். குடியரசு தினத்தன்று, அம்மாநில ஆளுநர்தான் கொடியேற்றி வைப்பார். இதுதான் நடைமுறை.
ஆனால், இன்று காலை மெரினா கடற்கரையில் நடைபெற்ற சுதந்திர தினத்தன்று, முதல்வர் ஓ.பி.எஸ் கொடியேற்றி வைத்தார். ஏனெனில், தமிழகத்திற்கு என நிரந்தர ஆளுநர் இன்னும் நியமிக்கப்படவில்லை. வித்யாசாகர் ராவ் மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். தமிழ்நாட்டிற்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் மராட்டிய மாநிலத்தில் நடைபெறும் விழாவில் கொடியேற்றினார்.
ஆளுநர் இல்லாததால், முதல்வர் ஓ.பி.எஸ் கொடியேற்றினார் எனத் தெரிகிறது.