Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா பொதுச்செயலாளர்: கதறி அழுதார் முதல்வர் பன்னீர்செல்வம்!

சசிகலா பொதுச்செயலாளர்: கதறி அழுதார் முதல்வர் பன்னீர்செல்வம்!


Caston| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:08 IST)
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதன் முறையாக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை பொறுப்பு சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக அதிமுக தலைமை பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அப்போது அவர் கண் கலங்கி அழுதார். பன்னீர்செல்வம் அழுததும் அங்கு வீற்றிருந்த அனைத்து உறுப்பினர்களும் கண் கலங்கினர். மேலும் மேடைக்கு முன்னதாக அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டபோது கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.
 


இதில் மேலும் படிக்கவும் :