கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?


Caston| Last Modified புதன், 27 செப்டம்பர் 2017 (17:18 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள மருத்துவமனைகளை விட்டுவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கண் பரிசோதனை செய்துள்ளார்.
 
இதே போலத்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூன் மாதம் கோவையில் உள்ள ஒரு வைத்தியசாலையில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசியல் பிரபலங்கள் சிகிச்சைக்கு தற்போது சென்னையை விட்டுவிட்டு கோவையை நாடுவது ஏன் என்பது தெரியவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :