இப்படி இருந்தா எப்படி?: அமைச்சருக்கு அறிவுறை வழங்கிய முதல்வர் எடப்பாடி!

இப்படி இருந்தா எப்படி?: அமைச்சருக்கு அறிவுறை வழங்கிய முதல்வர் எடப்பாடி!


Caston| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (10:39 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆட்சியை தக்க வைக்க அதிமுகவினர் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை பற்றி கவலைப்படுகிறாரோ இல்லையோ ஆட்சியை தக்கவைப்பதை பற்றி தான் கவலைப்படுவதாக அரசல் புரசலாக பேச்சு வருகிறது.

 
 
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு, தமிழக எதிர்க்கட்சிகள் எம்எல்ஏக்கள் என அனைவருடனும் இணக்கமாக செல்கிறார். யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் இந்த ஆட்சியை எப்படியாவது நிறைவு செய்ய வேண்டும் என நினைக்கிறார் அவர்.
 
ஆனால் சொந்த கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் இணக்கமில்லாமல் இருப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளரும், தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் துறை சம்பந்தமான மானிய கோரிக்கையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


 
 
இதனையடுத்து கடலூர் மாவட்ட அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக சந்தித்து அமைச்சர் சம்பத் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் சம்பத்தை அழைத்து மாவட்டத்தில் யாரிடமும் இணக்கமாக இல்லாமலிருந்தால் எப்படி எல்லாக்கட்சி எம்எல்ஏக்களும் புகார் சொல்கிறார்கள். கொஞ்சம் பார்த்து அனுசருச்சு போங்க என அறிவுரை வழங்கியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :