செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (17:05 IST)

சென்னையில் கருக்கல் கட்டிய மேகம் ! மக்களின் தாகம் தீருமா ?

சமீபத்தில் ஃபானி புயல் வங்கக்கடலில் மையம் கொண்டது. அப்போது தமிழகக் கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டது. முக்க்யமாக மழைவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது,. ஆனால் ஃபானி புயல் நம்மை ஏமாற்றிவிட்டு ஒடிஷாவின் மீது பாய்ந்தது. அங்கு கரையைக் கடந்த  புயல் பல வீடுகள், கட்டிடங்கள், பஸ், கிரேன் போன்றவற்றை சூறையாடியது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் மேகங்கள் சூரியனை மறைத்து கருப்புமேகமாகவே நர்த்தனமாடி வருகிறது. இந்தக் கோடையில் ஆளையே சுடும் வெய்யிலில் குடிக்கத் தண்ணீர் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. சில  இடங்களில் தண்ணீர்ப்பாடு பெரும்பாடாக உள்ளது.
 
மழை வந்தால்தான் சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் நிறைந்து ஓரளவு தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் மேகம் கூடி கருக்கல் கட்டியுள்ளது. இந்த மேகங்கள்  நல்ல மழையாகப் பொழிந்தால் மக்களின் தண்ணீர்ப் பிரச்சனை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. பார்ப்போம் வானம், பூமியுடன் மழையாய்ப் பொழிந்து பேசுமா இல்லை கருக்கலுடன் பேசாமல் கலைந்துவிடுமா  என்று!