திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (17:54 IST)

2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய க்ரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்  என சென்னை மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்த  நாளை அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி  டாஸ்மாக் கடைகள், பார்கள்,  உரிமம் பெற்றுள்ள  சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும் என்றும், அதேபோல், வரும் 9 ஆம் தேதி  இறைதூதர் முகமது  நபி அவர்களின் பிறந்த தினமான மிலாடி  நபியையொட்டி அன்று டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.