Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பு

வெள்ளி, 16 ஜூன் 2017 (06:04 IST)

Widgets Magazine

ரேசன் கார்டில் பெயர், முகவரி மற்றும் வேறுசில திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களுக்காக சென்னையில் வரும் ஞாயிறு அன்று சிறப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், 'குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்.

அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன் 2017 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே 17.06.2017 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால்குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

செங்கோட்டையனின் 37 அதிரடி அறிவிப்புகள்: வெற்றி பாதையை நோக்கி கல்வித்துறை

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி ...

news

மூன்று இளைஞர்கள் திருமணம்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் கொடுமை

ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதையே இன்னும் இந்தியா போன்ற சில நாடுகள் சட்டபூர்வமாக ...

news

முதல் நாளிலேயே விலை குறைகிறது பெட்ரோல்-டீசல். பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜூன் 16 முதல் அதாவது நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் மாற்றம் தினசரி இருக்கும் ...

news

குஷ்பு பட்ட பாட்டை மறந்துவிட்ட கஸ்தூரி! வேறு வழியின்றி மன்னிப்பு

பாமக போன்ற சிறிய கட்சிகள், ரஜினியின் அரசியல் ஆகியவை குறித்து பரபரப்பான கருத்துக்களை நடிகை ...

Widgets Magazine Widgets Magazine