வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (08:34 IST)

சாலைகளில் ஓட 10,000 அரசு பேருந்துகள் தகுதியற்றதாக உள்ளது: சிஐடியு குற்றச்சாட்டு..!

அரசு பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 10,000 அரசு பேருந்துகள் சாலைகளில் ஓட தகுதியற்றவையாக உள்ளது என சிஐடியு பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சிஐடியு மாநில அளவிலான கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சௌந்தர்ராஜன் ’போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களை அவுட்போர்ஸ் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்றும் மினி பேருந்துகள் இயக்குவதை தனியார் இடம் ஒப்படைக்க கூடாது என்றும் அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
 மேலும் சாலைகளில் ஓட நிர்வாகிகள் அரசு பேருந்துகள் தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் மின்சார பேருந்துகளையும் அரசை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் பஞ்சபடியும் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன் அவர்களின் இந்த அடுக்கடுக்கான பகிரங்க குற்றச்சாட்டுகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva