ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (07:47 IST)

கனிமொழியை இந்தியரா? என கேட்ட விவகாரம்: சிஐஎஸ்எப் அதிரடி முடிவு

சமீபத்தில் விமான நிலையத்தில் தன்னை சிஐஎஸ்எப்  ஊழியர் ஒருவர் இந்தியரா? என கேட்டதாக திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இனிமேல் விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாக சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்களிடம் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியரா? என சிஐஎஸ்எப் வீராங்கனை ஒருவர் கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியது இது குறித்து பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் விமான நிலையங்களில் மொழி சிக்கலை தவிர்ப்பதற்காக இனிமேல் பயணிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள பதவிகளில் இருப்பவர்கள் உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்று சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே தெரிவித்துள்ளார். இதனால் கனிமொழிக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் பயணிகளீன் உணர்வுகளை மதித்து கண்ணியத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது