அதிகரிக்கும் கொரோனா; முக்கிய ஹீரோக்களின் ஷூட்டிங் ரத்து!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் பெரிய ஹீரோக்களின் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை விஸ்வருபம் எடுத்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு திரை பிரபலங்களும் சமீப காலமாக பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கிய நாயகர்களான சூர்யா, விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.