1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2016 (18:15 IST)

சினிமா காட்சிகள் நாளை ரத்து: முழு அடைப்புக்கு ஆதரவு!

சினிமா காட்சிகள் நாளை ரத்து: முழு அடைப்புக்கு ஆதரவு!

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


 
 
இந்நிலையில் இந்த முழு அடைப்புக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
தமிழகம் முழுவதும் உள்ள 1200 திரையருங்குகளில் நாளை 2 காட்சிகள் இந்த முழு அடைப்புக்கு ஆதவாக ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.