வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (13:02 IST)

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட தொகை உயர்வு...

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் சிரமப்படுவதை உணர்ந்த அரசு மக்களின் மனச்சுமையை குறைக்கவே முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. 
அதில் பல கோடி மக்கள் இணைந்து நல்ல முறையில் சிகிச்சை பெற்று பயனாளர்களாக தொடர்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் மகிழ்சியான செய்தியாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுருக்கிறார்.
 
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
 
பயனாளிகளின் கோரிக்கையை  ஏற்று காப்பீடு தொகையை  அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்தக்  காப்பீடு தொகை  உயர்வு திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.  
 
முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இத்திட்டம் மூலம் இனி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 
 
இதுவரை 1.58 கோடி குடும்பத்தினர் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர்.
 
இப்புதிய திட்டம் நாளை முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பயனாளர்கள் ஆண்டுக்கு   ரூ. 5 லட்சத்திற்கு  கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.