1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:01 IST)

''சென்னை சங்கமம்'' நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்

chennai
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
 

இதையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை இன்று தீவுத்திடலில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை  இணைந்து தீவுத் திடலில் சென்னை சங்கம் என்ற  நிகழ்ச்சியை நடத்துகிறது.

எனவே இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், என 16 இடங்களில்  இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதிமுக ஆட்சி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அப்போது இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை எனவே  இந்த முறை திமுக ஆட்சியில் இது மீண்டும் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக. ஸ்டாலின், கலைகளின் வழியாக சாமானிய மக்களின் வலியை பேசியது திராவிட இயக்கம்தான் எனத் தெரிவித்து, நிகழ்ச்சியைப் பார்வையிட்டு வருகிறார்.