வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 4 நவம்பர் 2021 (11:50 IST)

பெட்ரோல், டீசல் வாட் வரி குறைத்து முதல்வர் அறிவிப்பு

இந்தியாவில் என்றுமில்லாத வகையில்  பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் மஹாராஷ்டிராவில் ரூ.120க்கு பெட்ரோல் விற்பனை ஆனது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வாட் வரி குறைத்து முதல்வர்  அறிவித்துள்ளார். அதில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.12.85 , டீசல் ரூ.19 குறையும் என தெரிகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும் மத்திய அரசின் கலால் வரி குறைப்பு காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.12 ,டீசல் லிட்டருக்கு ரூ.17 குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.