ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (19:12 IST)

வெடிபொருள் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த.பானு ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்த  நிலையில்,  விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘’விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று பிற்பகல் (25.7.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முருகேஸ்வரி, க/பெ.ராமச்சந்திரன் (வயது 39) மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பானு, க/பெ.சண்முகம் (வயது 39) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.