செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:58 IST)

தவணை முறையில் சிக்கன், மட்டன்.. கோவை கடைக்காரரின் அசத்தல் திட்டம்..!

சிக்கன் மட்டன் வாங்க பணம் இல்லையா? தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என கோவையைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர் விளம்பரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை குனியமுத்தூர் என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் அந்த பகுதியில் இறைச்சி கடை வைத்திருக்கும் நிலையில் அவர் வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்குவது போல் சிக்கன் மட்டன்களையும் தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். 
 
வீட்டு விசேஷங்களுக்கு 5000 ரூபாய்க்கு மேல் இறைச்சி வாங்கும் பொது மக்களுக்கு 3 மாதம், 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என தவணை முறையில் பணம் வசூலித்து வருகிறார். இஎம்ஐ முறையில் இறைச்சி வாங்குவது கூடுதலான விலை என்றாலும் இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்ப வருவதாக கூறப்படுகிறது. 
 
இதுவரை டிவி வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் மட்டும் தான் தவணை முறையில் தரப்பட்டு வந்த நிலையில் தற்போது சிக்கன் மட்டன் ஆகிய இறைச்சி பொருட்களும் தவணை முறையில் கிடைப்பது கோவை மக்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva