1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (17:42 IST)

ஆன்லைன் கடன் செயலி: மேலும் ஒரு இளைஞர் தற்கொலை

suicide
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட ஏராளமான பணத்தை இழந்துள்ளார்.  இதனை அடுத்து அவர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மி விளையாடி தோல்வி அடைந்துள்ளார் 
 
இதனால் ஆன்லைனில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததோடு அவருடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அவருடைய உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.