ராணுவ பயிற்சி முடிந்தவுடன் காதலை சொன்ன சென்னை இளைஞர்
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணுவ பயிற்சி முடிந்ததும் தனது கல்லூரி தோழியிடம் காதலை கூறிய சம்பவம் குறித்த வீடியோவும் புகைப்படமும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சென்னையை சேர்ந்த சந்த்ரேஷ் என்னும் இளைஞர் தனது கல்லூரி தோழியான தாரா மேத்தாவை உயிருக்கு உயிராக காதலித்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலையில் சேர்ந்தவுடன் தான் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அடக்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சிப்பள்ளியில் நேற்றுடன் சந்த்ரேஷுக்கு பயிற்சி முடிந்தது. பயிற்சி முடிந்த அடுத்த நிமிடமே தாராவிடம் தனது காதலை கூறினார். ஏற்கனவே தாரா தனது காதலை சொல்லிவிட்டாலும் பதில் வராமல் காத்திருந்த அவருக்கு நேற்று பதில் கிடைத்ததால் அவரும் மகிழ்ச்சி அடைந்தார். சந்த்ரேஷ் பயிற்சி முடிந்ததும் தாராவிடம் காதலை கூறியபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.