ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (12:56 IST)

உயிர் இருக்கு… உடனே காப்பாத்தணும்! – இளைஞரை தோளில் தூக்கி ஓடிய பெண் இன்ஸ்பெக்டர்!

மரம் முறிந்து விழுந்ததில் இறந்துவிட்டதாக எண்ணிய இளைஞரை பெண் இன்ஸ்பெக்டர் தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. சென்னை அண்ணா நகருக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்ததில் அங்கு தங்கியிருந்த நபர் காயமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்து மரத்தின் அடியிலேயே கிடந்துள்ளார்.

மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே அந்த இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இளைஞரின் உயிரை காக்க பெண் காவலர் தோளில் சுமந்து ஓடிய சம்பவம் குறித்து பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.