புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (15:30 IST)

குழந்தையின் ஸ்கூல் ஃபீஸை கூட விடல..! – ரம்மி பிரியரின் மனைவி எடுத்த முடிவு!

சென்னையில் கணவர் தொடர்ந்து ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் மனைவி விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அனுமதி உள்ள நிலையில் அந்த விளையாட்டில் பலரும் பணத்தை இழந்து வருவதும், தற்கொலை செய்து கொள்வதும் தினசரி அதிகரித்து வருகின்றது.

சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு புவனேஷ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகனும் உள்ளான். அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கிய சுரேஷ் அதற்கு அடிமையாகியுள்ளார்.

வீட்டில் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். தன் மகனின் பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக புவனேஷ்வரி பணம் கொஞ்சம் பத்திரப்படுத்தியுள்ளார். அதையும் சுரேஷ் ரம்மி விளையாடி இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த புவனேஷ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.