திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (14:29 IST)

நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் சென்னை தப்பியது! – டிடிவி தினகரன்!

நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் சென்னை தப்பியது! – டிடிவி தினகரன்!
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நல்ல அதிகாரிகளின் செயலே இதற்கு காரணம் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.



வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலானது சென்னையை நெருங்கி கரையை கடந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை வடிய வைப்பதற்கான பணிகளில் பல்வேறு அரசு ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மழை வெள்ளம் குறித்து பேசிய அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “சென்னை மக்களை காப்பாற்றாமல் விட்டுவிடுவார்களோ என அஞ்சினோம். ஆனால் நல்ல விதமாக அனைத்து மக்களையும் காப்பாற்றியுள்ளனர். நல்ல அதிகாரிகளின் செயல்பாடுகளால் சென்னை தப்பியது என்றே கருதுகிறேன். தொடர்ந்து மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K