வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 2 டிசம்பர் 2015 (18:26 IST)

சென்னைக்கு அபாய எச்சரிக்கை: தகவல் தொடர்பு, ரயில் சேவை, போக்குவரத்து துண்டிப்பு

சென்னையில் பெய்து வரும் தீவிர கனமழையால் தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.  கிட்டத்தட்ட தனித்தீவாக மாறிய சென்னை அபாய நிலையில் உள்ளது.
 

 

 


சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று இரவு பல இடங்கலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. வெள்ளம் புகுந்த இடங்களில் இருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில். தற்போது சென்னை நகரமே ஸ்தம்பித்துள்ளது.
 
சென்னையின் பெரும்பாலன கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் உணவு கிடைக்காமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர்
 
செம்பரப்பாக்கம், புழல், பூண்டி, மதுராந்தகம் ஏரிகளில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக செம்பரபாக்கம் ஏரியிலிருந்து நேற்றிரவிலிருந்து 30000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடையாறு பாலங்களின் மேல் தண்ணீர் செல்வதால் சைதாபேட்டை, ஈக்காட்டுதாங்கல், கோட்டூர் புரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.  பாலங்களின் மேல் தண்ணீர் செல்வதால் 100 அடி சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி., சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது


 

 
இதனால் வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்துள்ளன. வேலைக்கு சென்ற பலர் நேற்று இரவு முதல் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர்,
 
கனமழையால் தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளில் மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. 
 
சுரங்கப்பாதைகளில் வெள்ள ...............................................  
 
                                                                                                    மேலும் படிக்க அடுத்தப் பக்கம் பார்க்க

நீர் புகுந்துள்ளது. நகரம் முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் மட்டுமல்லாமல், நடந்துகூட யாரும் செல்ல முடியத நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உணவு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.


 


இந்நிலையில், சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மற்ற தகவல் தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துள்ளன. மேலும் சென்னைக்கு வரும் 20க்கு மேற்பட்ட ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து செல்லும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. 
 
விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 
 
மறைமலைநகரில் உள்ள அனைத்து ஐ.டி., நிறுவனங்களிலும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் பல ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி சாலைகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னைக்கு உள்ளேயே பல பகுதிகள் தனித்தனியாக துண்டிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட தனித்தீவு நிலைக்கு சென்னை தலைநகர் தள்ளப்பட்டுள்ளது.