வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:23 IST)

வேளச்சேரி எம் எல் ஏ வை முற்றுகையிட்ட பொதுமக்கள்… சரமாரி கேள்வி!

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் நான்காம் தேதி சென்னை முழுவதும் பெருமழை பெய்த நிலையில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. அந்த பகுதி முழுவதும் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மின்சாரம், தொலைத்தொடர்பு நெட்வொர்க் ஆகியவை கிடைக்காததால் மக்களால் யாரையும் தொடர்புகொண்டு எந்த உதவியும் கேட்க முடியவில்லை. மழை நின்ற மறுநாளில் இருந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தாலும் இன்னமும் முழுமையாக அந்த பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் வேளச்சேரி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான ஹசன் மௌலானாவை பொதுமக்கள் முற்றுகையிட்டு அவரை நோக்கி ஆவேசமாக சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.