வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (07:46 IST)

தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்; சென்னை பல்கலை ஆசிரியர்கள்

Madras University
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் கூட்டுக் குழுவின் செயற்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ள சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம் என - சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
 
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் கூட்டுக் குழுவின் செயற்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருவன:
 
22 பேராசிரியர்களின் நியமனத்தை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்
 
சென்னை பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்
 
நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
 
பழைய நடைமுறையின்படி பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
 
தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
 
மாணவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளை செய்யவேண்டும்
 
பல்கலைக்கழகத்துக்கான நிதி மானியத்தை உடனே அரசு வழங்க வேண்டும்
 
Edited by Siva