1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 மே 2021 (18:06 IST)

சென்னை-சேலம் விமானம் 10 நாட்களுக்கு ரத்து: அதிரடி அறிவிப்பு

சென்னையில் இருந்து சேலத்திற்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்த நிலையில் 10 நாட்களுக்கு சென்னை-சேலம் விமானம் நிறுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார் 
 
சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வரத்து சுத்தமாக இல்லை என்றும் அதனால் சென்னை - சேலம் விமானசேவை ஊரடங்கு முடியும் வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்றும் ஆனாலும் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும், மருத்துவ தேவைக்காக மட்டும் கோரிக்கை எழுந்தால் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்