1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (14:53 IST)

மாணவிகளிடம் ஆபாச உரையாடல்: சென்னை பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

posco
பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக உரையாடியதாக சென்னை பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் ஆசிரியர்கள் சிலர் ஆபாசமாக உரையாடல் செய்த வகையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
அந்த வகையில் சென்னை முகப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் என்பவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாச உரையாடல் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இது குறித்த வீடியோவும் பரவிய நிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை திருமங்கலம் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது