1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:45 IST)

காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!

chennai roads
காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!
தீபாவளி கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதால் சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதும் சென்னையின் முக்கிய சாலைகள் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருமே சொந்த ஊருக்கு சென்று விட்டனர்
 
இதுவரை 6 லட்சம் பேர் சென்னையில்  இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான தி நகர், புரசைவாக்கம் அண்ணாசாலை ஆகியவை வெறிச்சோடி கலப்பதாகவும் சென்னையில் உள்ள முக்கிய கடை வீதிகளில் உள்ள கூட்டமே இல்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva