செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (20:43 IST)

சென்னையில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக தினந்தோறும் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
அதன்படி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
 
பம்மல் பகுதி: அண்ணாசாலை மெயின் ரோடு, பம்மல் மெயின் ரோடு, பசும்பொன் நகர், 30 அடி ரோடு ஒரு பகுதி, மோசஸ் தெரு, பொன்னி நகர், ஐய்யப்பா நகர், சாமிநாதன் நகர், ஈஸ்வரன் நகர் மற்றும் சத்தியா நகர்.
 
அலமாதி பகுதி: அலமாதி, சிங்கிலிக்குப்பம், புதுக்குப்பம், கன்னிகாபுரம், பாரதி நகர், காரணிப்பேட்டை, அகரம்கண்டிகை, சேத்துப்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.