புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (11:36 IST)

மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்கக்கூடாது! – சென்னை போலீஸ் எச்சரிக்கை!

சென்னையில் போதை தரும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்க கூடாது என மருந்தகங்களுக்கு சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் மருந்தகங்கள் பல செயல்படும் நிலையில் பொதுவாகவே மக்கள் பலர் தங்கள் நோய்களுக்கு மருத்துவமனை செல்லாமல் மருந்தகங்களிலேயே நேரடியாக மாத்திரைகள் வாங்கி கொள்வது தொடர்கிறது. அதேசமயம் தூக்க மாத்திரை உள்ளிட்ட போதை உருவாக்கும் மருந்து, மாத்திரைகளும் கூட மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகங்கள் விற்பதாக புகார் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மருந்தகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்பனை செய்தால் சம்பந்தபட்ட மருந்தகங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.