செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (09:48 IST)

பர்த்டே பார்ட்டி... கடற்கரையை குப்பையாக்கிய இளைஞர்கள்... காவலரின் நூதன தண்டனை

பர்த்டே பார்ட்டிக்காக சென்னை பெசண்ட் நகர் பீச்சை குப்பையாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ்காரர் நூதன தண்டனை கொடுத்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சமீபத்தில் இளைஞர்கள் சிலர் நண்பனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பின்னர் தாங்கள் வாங்கிவந்த கேக்கின் பெட்டிகளை கூட அருகிலிருக்கும் குப்பை தொட்டிக்குள் போடாமல் அப்படியே சென்றுவிட்டனர்.
 
இந்நிலையில் டியூட்டிக்காக சாஸ்த்ரி நகர் போலீஸ் பூத்திற்கு வந்த எபென் கிறிஸ்டோபர் என்ற காவலர் அங்கிருந்த குப்பையை பார்த்து கோபப்பட்டார். அந்த கேக் பெட்டிகளின் மேல் உள்ள நம்பருக்கு போன் செய்து கேக்கை ஆர்டர் செய்தவரின் நம்பரை வாங்கினார்.
 
உடனடியாக அந்த இளைஞருக்கு போன் செய்த கிறிஸ்டோபர் அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வர சொன்னார். அங்கு வந்த இளைஞர்களிடன் துடைப்பத்தை கொடுத்து அவர்கள் விட்டுசென்ற குப்பையை அள்ள சொன்னார். பின்னர் பொது இடங்களை நமது சொந்த வீடுபோல சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இது நம் பணியல்ல என்று யோசிக்காமல், பொறுப்புடன் செயல்பட்ட கிறிஸ்டோபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.