1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:42 IST)

குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் சீண்டல்! – இருவர் கைது!

சென்னையில் குருபூஜை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் சிலைகள் உள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் அங்கு வந்த இருவர் கிண்டல் செய்து சீண்டலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை அந்த இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.