வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (11:28 IST)

சென்னையில் அரிவாளுடன் உலா வந்த நெல்லை ரவுடிகள்! – மடக்கி பிடித்த போலீஸார்!

சென்னையில் காரில் அரிவாளுடன் சுற்றி திரிந்த திருநெல்வேலி ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் சிவசண்முகம் சாலையில் வந்த ஒரு காரை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். உடனே அந்த காரில் இருந்தவர்கள் தப்பித்து ஓடவும் விரட்டி சென்ற போலீஸார் கார் டிரைவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த செல்வமணி என்பது தெரிய வந்துள்ளது. செல்வமணி மீது ஏற்கனவே தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. விசாரணையில் செல்வமணியுடன் வந்த மற்றவர்கள் குறித்தும் தெரிய வந்துள்ளது. அவர்களில் சிலர் மீது கொலை, நாட்டு வெடி குண்டு வீசியது உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இருவரை கைது செய்துள்ளதுடன் தப்பி ஓடியவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.