திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:07 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை தொண்ணூற்று ஐந்து ரூபாயை தாண்டி விட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் எடுக்கும் என்று பொது மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.100.23 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.95.59 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதே ரீதியில் சென்றால் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என்றும் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டும் என்றும் மக்கள் அச்சப்படுகின்றனர்.