மெட்ரோ ரயில்கள் இயக்கத்தில் கோளாறு! – தாமதமாவதால் பயணிகள் அவதி!
சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்குவதில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பல முக்கிய வழித்தடங்களிலும் செயல்படும் மெட்ரோ ரயில்களில் போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் பலரும் மெட்ரோ ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் இன்று மெட்ரோ ரயில் இயக்குவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரனமாக நீலம் மற்றும் பச்சை ஆகிய இரு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் கால தாமதம் ஆகியுள்ளது.
இவ்வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Edit by Prasanth.K