திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:33 IST)

இன்றும் நாளையும் மெட்ரோ ரயிலில் கட்டணம் தள்ளுபடி: எவ்வளவு தெரியுமா?

சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பதும் இந்த மெட்ரோ ரயில் மூலம் எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்தில் பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் மெட்ரோ ரயிலில் சுமார் 20 நிமிடங்களில் சென்று விடலாம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவ்வப்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சலுகைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது.அந்த வகையில் தற்போது 50 சதவீத கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மெட்ரோ ரயிலில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டு திருநாட்களை அடுத்து இன்றும் நாளையும் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை மெட்ரோ ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.