1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:31 IST)

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தின் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பின் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது